சார்ஜா ஓட்டலில் இந்தியாவை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை?

இந்தியாவை சேர்ந்த 33 வயது நபர் சார்ஜா நகரில் உள்ள ஓட்டலில் ஓரிரவுக்கு மட்டும் அறை எடுத்து தங்கிய நிலையில் குளியலறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்
Published on

துபாய்:

இந்தியாவை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு மாதத்துக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார். பல்வேறு ஓட்டல்களில் தங்கிய அவர், கடந்த புதன்கிழமை சார்ஜா நகரில் உள்ள ஓட்டலில் ஓரிரவுக்கு மட்டும் என்று கூறி வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.

அறையை காலி செய்ய வேண்டிய நேரம் நெருங்கி விட்டதை அவருக்கு தெரிவிப்பதற்காக ஓட்டல் பணியாளர்கள் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது மறுமுனையில் இருந்து பதில் கிடைக்கவில்லை.

வியாழக்கிழமை மாலை 6 மணிவரை அறை உள்புறமாக தாழிடப்பட்டிருந்ததால் கதவை மாற்றுச்சாவி மூலம் திறந்த பணியாளர்கள், குளியலறை கதவில் அவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருவதாக சார்ஜா ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இறந்த இந்தியரின் பெயர் மற்றும் அடையாளம் ஏதும் வெளியிடப்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com