

காத்மாண்டு:
நேபாளத்தின் பத்வால் பகுதியில் இருந்து சூர்கேட் பகுதிக்கு ஒரு பேருந்து சென்றது. இன்று அதிகாலையில் இந்த பேருந்து பான்கே மாவட்டம் தாகரி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. பின்னர் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இந்தியாவின் கொல்கத்தா நகரைச் சேர்ந்த நிலுஜி அதிகாரி (35) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுமார் 20 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பேருந்து டிரைவரை கைது செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் பெரும்பாலானவர்கள், இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக செல்லும் தொழிலாளிகள் என்று தெரியவந்துள்ளது.