உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வரலாறு படைத்த இந்திய சிறுவன்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் இந்தியாவை சேர்ந்த ரிஷி தேஜ் என்ற 10 வயது சிறுவன் வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான். #WorldCup2018 #FIFA2018 #Indianballboy #RishiTej
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வரலாறு படைத்த இந்திய சிறுவன்
Published on

மாஸ்கோ:

32 அணிகள் பங்கேற்கும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 15 வரை ரஷ்யாவில் இத்தொடர் நடக்கிறது.  

பொதுவாக ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் வீரர்கள் மைதானத்திற்குள் செல்லும் போது அவர்களுடன் கை கோர்த்தபடி சிறுவர்-சிறுமிகள் செல்வார்கள். அதோடு போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை நடுவர் சுமந்து செல்வார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற  பெல்ஜியம், பனாமா இடையேயான போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 10 வயது சிறுவனான ரிஷி தேஜ் என்ற சிறுவன் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்றான். உலகக்கோப்பை போட்டிகளில் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்ற முதல் இந்திய சிறுவன் என்ற பெருமையை ரிஷி தேஜ் பெற்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த நதானியா ஜான் என்ற 11 வயது சிறுமிக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் 22ம் தேதி பிரேசில்- கோஸ்டா ரிகா அணிகள் மோதும் போட்டியின் போது வீரர்களுடன் அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து செல்லும் பெருமையை தமிழகத்தை சேர்ந்த சிறுமி நதானியா ஜான் பெறவுள்ளார். #WorldCup2018 #FIFA2018 #Indianballboy #RishiTej

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com