துபாய் லாட்டரியில் 10 லட்சம் டாலர் ஜாக்பாட் பரிசு பெற்ற இந்தியர்

துபாய் நாட்டில் நடைபெற்ற ஜாக்பாட் குலுக்கலில் இந்தியாவைச் சேர்ந்தவர்க்கு 10 லட்சம் டாலர் பரிசுத் தொகையாக கிடைத்துள்ளது.
துபாய் லாட்டரியில் 10 லட்சம் டாலர் ஜாக்பாட் பரிசு பெற்ற இந்தியர்
Published on

துபாய்:

கேரளாவைச் சேர்ந்த பிண்டோ பால் தோமன்னா சார்ஜாவில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைனில் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். அந்த டிக்கெட்டிற்கு இன்று ஜாக்பாட் பரிசு அடித்துள்ளது. அவருக்கு 10 லட்சம் டாலர் பரிசுத்தொகையாக கிடைத்துள்ளது.

தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை தனது நண்பர் பிரான்சிஸ் சபாஸ்டினுடன் பகிர்ந்து கொள்வதாக தோமன்னா தெரிவித்துள்ளார். மேலும், 'துபாய் டுயிட்டி ஃப்ரீக்கு நன்றி. இந்த பரிசுத்தொகை எங்கள் இருவரின் வாழ்க்கையை மாற்றி விட்டது. நாளை துபாய் டுயிட்டி ஃப்ரீக்கு செல்வதற்கு செல்வது நினைத்து மிகவும் ஆவலாக உள்ளோம்' என தெரிவித்தார்.

துபாய் டுயிட்டி ஃப்ரீ டிரா நிகழ்ச்சியானது 1999-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 127 இந்தியர்கள் இந்த ஜாக்பாட் நிகழ்ச்சியில் பரிசு பெற்றுள்ளனர். தோமன்னா 128-வது அதிர்ஷ்டசாலியாகும். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com