பாகிஸ்தான் கோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போனை பறித்த அதிகாரிகள்

பாகிஸ்தான் கோர்ட் அறையில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போனை கோர்ட் அதிகாரிகள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் கோர்ட்டில் இந்திய தூதரக அதிகாரியின் செல்போனை பறித்த அதிகாரிகள்
Published on

இஸ்லாமாபாத்:

இந்தியாவை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்து, நாடு திரும்புவதற்காக உதவி கோரியுள்ளார். தன்னை பாகிஸ்தானைச் சேர்ந்த தாஹிர் அலி, ஏமாற்றி திருமணம் செய்துவிட்டதாகவும், தனது பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை அவர் பறித்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உஸ்மா சார்பில், அவரது வழக்கறிஞர் மாலிக் ஷா நவாஸ் நூன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி பியூஷ் சிங் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவரும் கோர்ட்டுக்குள் இருந்தபோது, இந்திய தூதரக அதிகாரியின் செல்போனை, கோர்ட் அதிகாரிகள் திடீரென பறித்துச் சென்றனர். இதனால் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோர்ட் நடவடிக்கை முடிந்து வெளியே வரும்போது செல்போனைக் கொடுத்துள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரி செல்போனில் கோர்ட்டுக்குள் புகைப்படம் எடுத்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியானது. ஆனால் அவர் புகைப்படம் எடுக்கவில்லை என்றும், செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் கோர்ட்டில் தெரிவித்தார்.

இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. விதிமுறையை அறியாமல் தவறுதலாக செல்போனை உள்ளே எடுத்து வந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com