இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு பதவி காலம் நீடிப்பு

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு பதவி காலம் நீடிப்பு

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவை மாற்றி அமைப்பது தொடர்பாக பொதுக் குழுவில்தான் முடிவு எடுக்க முடியும். இதையடுத்து தேர்வு குழுவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
Published on

மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை பதவி காலம் இருக்கும். இந்த நிலையில் தேர்வுக்குழு பதவி காலத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு நடக்கும் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

லோதா கமிட்டி பரிந்துரை அமல்படுத்தவது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கால் கிரிக்கெட் வாரிய ஆண்டு பொதுக்குழு கூடும் தேதியை முடிவு செய்யப்படவில்லை.

இதனால் தேர்வுக் குழுவை மாற்றி அமைப்பது தொடர்பாக பொதுக் குழுவில்தான் முடிவு எடுக்க முடியும். இதையடுத்து தேர்வு குழுவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com