கடைசி 20 ஓவர் போட்டி - இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை சென்னை வருகை

கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். #IndianCricketTeam #INDvWI
கடைசி 20 ஓவர் போட்டி - இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நாளை சென்னை வருகை
Published on

சென்னை:

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 6-ந் தேதி நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். 

வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று ஓய்வு எடுத்த வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். வீரர்கள் தனித்தனியாக வந்து இணைவார்கள் என்று தெரிகிறது.  #IndianCricketTeam #INDvWI

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com