இலங்கைக்கு எதிராக பயிற்சி ஆட்டம்: இந்திய கிரிக்கெட் வாரிய அணி நிதான ஆட்டம்

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணி நிதனமான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இலங்கைக்கு எதிராக பயிற்சி ஆட்டம்: இந்திய கிரிக்கெட் வாரிய அணி நிதான ஆட்டம்
Published on

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இலங்கை அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் சமரவிக் ரமா (74 ரன்), கருணாரத்னே (50), மேத்யூஸ் (54), டிக்வெலா (73) ஆகிய 4 வீரர்கள் அரை சதம் அடித்தனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 411 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 2-வது மற்றும் கடைசி நாள் ஆட்டமான இன்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணி பேட்டிங் செய்தது. உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com