உடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கணியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார்.இதில் பலர் கலந்து கொண்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்டு  ஒன்றிய செயலாளர் நடேசன் படுகொலை  சம்பவத்தை கண்டித்துஉடுமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ரணதேவ் தலைமை  வகித்தார்.

நிர்வாகிகள் வெங்கடேஷ் ,செல்வராஜ் ,முருகன், முருகானந்தம், சுபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே கணியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைசெயலாளர் செல்லத்துரை தலைமை வகித்தார்.இதில் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில்கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் முருகேஷ் ,மூர்த்தி ,குணசேகரன், பால், நாராயணன், நடராஜன், சுந்தர்ராஜ் ,கோபாலகிருஷ்ணன் ,வைதேகி, ரேவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com