30 ஆண்டு சேவைக்கு பின்னர் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் வருணா ஓய்வு

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல் இன்றுடன் தனது சிறப்பான பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது.
30 ஆண்டு சேவைக்கு பின்னர் இந்திய கடலோரக் காவல்படை கப்பல் வருணா ஓய்வு
Published on

இந்திய கடலோரக் காவல்படையில் 30 ஆண்டுகள் சேவையாற்றிய வருணா கப்பல் இன்றுடன் தனது சிறப்பான பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்வு பெற்றது.

நாட்டின் சுமார் 7 ஆயிரத்தி 500 கிலோ மீட்டர் கடற்கரையை பாதுகாக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் பயன்பாட்டுக்காக 18 கப்பல்கள் வரை கடலோரக் காவல் படையில் உள்ளன. கடந்த 1984-ம் ஆண்டு தயாராகி 1988-ம் ஆண்டு கடலோரக் காவல் படையில் இணைக்கப்பட்ட வருணா கப்பலானது சுமார் 30 ஆண்டுகள் சிறப்பான சேவையை வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com