மீன்பிடி படகில் கடத்தி வந்த 1000 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்- கடலோர காவல் படை நடவடிக்கை

மீன்பிடி படகில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தி வந்த 3 பேரை கடலோர காவல் படையினர் பிடித்துள்ளனர்.
கடலோர காவல் படையிடம் பிடிபட்ட நபர்கள்
கடலோர காவல் படையிடம் பிடிபட்ட நபர்கள்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மீன்பிடி படகை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் அந்த மீன்பிடி கப்பலில் 1000 கிலோ அளவில் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு வந்தது தெரியவந்தது. அழிந்து வரும் இந்த கடல் அட்டைகளின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மீன்பிடி படகு மற்றும் கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். கடல் அட்டைகளை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com