சிங்கப்பூரில் நர்சுக்கு பாலியல் தொல்லை: துபாய்வாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரம்படி

சிங்கப்பூரில் புற்றுநோயாளி மனைவிக்கு உதவி செய்த செவிலியரை உறவுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற துபாய்வாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரம்பு அடிகளுடன் 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நர்சுக்கு பாலியல் தொல்லை: துபாய்வாழ் இந்திய தொழிலதிபருக்கு பிரம்படி
Published on

சிங்கப்பூர்:

துபாய் நாட்டில் தொழில் செய்துவரும் இந்தியரான ஷியாம் குமார் சதாசிவம்(47) என்பவர் புற்றுநோயாளியான தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கியிருந்தபடி, மனைவிக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி தனது மனைவிக்கு ஒத்தாசையாக இருந்த சுமார் 25 வயது செவிலியரை தனது பாலியல் ஆசைக்கு பயன்படுத்திகொள்ள ஷியாம் குமார் சதாசிவம் முயன்றார். இதற்கு மறுத்த தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிங்கப்பூரை சேர்ந்த அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் 15 ஆயிரம் டாலர் ரொக்க ஜாமினில் வெளியேவந்து வழக்கை சந்தித்து வந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் மாத்யூ ஜோசப் குற்றவாளிக்கு மூன்று பிரம்படிகளுடன் 7 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com