உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கல்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அமித் பங்கல்
அமித் பங்கல்
Published on

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அமித் பங்கல் கலந்து கொண்டார்.

இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமித் பங்கல் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஷகோபிடின் ஜொய்ரோவ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் 5-0 என்ற கணக்கில் தோற்ற பங்கல், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தவர் அமித் பங்கல் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com