காமன்வெல்த் போட்டிகளில் இருந்து இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். #CWG2018
காமன்வெல்த் போட்டிகளில் இருந்து இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றம்
Published on

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக காமன்வெல்த் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com