இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர் கைது

இலங்கையில் சட்ட விரோதமாக தங்கி தொழில் செய்து வந்த இந்தியரை இலங்கை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர் கைது
Published on

கொழும்பு:

இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் 52 வயது மதிக்கத்தக்க இந்தியர் சட்ட விரோதமாக தொழில் செய்து வந்தார். சுற்றுலா வீசாவில் சென்ற அவர் குடியுரிமை விதிகளை மீறி தங்கி இருந்துள்ளார்.

இதை அறிந்த இலங்கை குடியுரிமை அதிகாரிகள் அவரை கடந்த சனிக்கிழமை ராஜமால்வட்ட ஜங்சனில் வைத்து கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com