ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. #INDvSA #JohannesburgTest
ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு
Published on

ஜொகனஸ்பர்க்:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

முரளி விஜய், லோகேஷ் ராகுல், செட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கியா ரஹனே, பார்திவ் படேல் (விக்கெட்கீப்பர்), ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா

தென்னாப்ரிக்கா அணி விவரம்:

டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், ஹாசிம் அம்லா, டி வில்லியர்ஸ், டூ பிளெசிஸ் (கேப்டன்), குவின்டன் டி காக் (விக்கெட்கீப்பர்), வெர்னான் பிலாண்டர், ஆண்டிலே பெஹலுக்வாயோ, ககிசோ ரபாடா, மோர்னே மார்கல், லுங்கிசானி நிகிடி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com