பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்ல அனுமதிக்க மாட்டோம்- அரியானாவில் மோடி பிரசாரம்

இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், இனி பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலம் சார்கி தாத்ரி என்ற நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

70 ஆண்டுகளாக இந்தியாவிற்கும் அரியானா விவசாயிகளுக்கும் சொந்தமான நீர், பாகிஸ்தானுக்கு பாய்ந்தது. இனி இந்திய விவசாயிகளுக்கு சொந்தமான நீர், பாகிஸ்தான் பக்கம் செல்ல விடாமல் தடுப்போம். தடுத்து நிறுத்தப்படும் நீர், விவசாயிகளின் நிலங்களுக்கும் மக்களின் வீடுகளுக்கும் கொண்டு வரப்படும்.

பாகிஸ்தானுக்கு பாயும் நீரின் மீது அரியானா மற்றும் ராஜஸ்தான் விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. முந்தைய அரசாங்கங்களால் அது தடுத்து நிறுத்தப்படவில்லை. உங்களுக்காக நான் போராடுவேன். அரியானாவுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com