அம்பயரை முறைத்த பிராத்வைட்டுக்கு 15 சதவீதம் அபராதம்

வைடு வழங்கிய அம்பயரை முறைத்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரரான பிராத் வைட்டுக்கு 15 சதவீதம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட்
Published on

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தியா பேட்டிங் செய்யும்போது 42-வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் வீசினார். அப்போது ஒரு பந்தை வைடு என நடுவர் தெரிவித்தார்.

இதனால் பிராத்வைட் கோபம் அடைந்து நடுவரை நோக்கி முறைத்தார். அவரது செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிரானது என அவருக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சஸ்பெண்டுக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com