திருவனந்தபுரம், அசாமில் டெஸ்ட் போட்டிகள்

திருவனந்தபுரம், அசாமில் டெஸ்ட் போட்டிகள்

இலங்கை அணி டிசம்பர் மாதம் இந்தியா வந்து 3 வகையான கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டிகள் திருவனந்தபுரம், அசாம் ஆகிய இரு இடங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

புதுடெல்லி:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

3 டெஸ்டில் முதல் டெஸ்ட் முடிந்துவிட்டது. டெஸ்ட் தொடருக்கு பிறகு 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. செப்டம்பர் 6-ந் தேதியுடன் இலங்கை பயணம் முடிகிறது.

செப்டம்பர் இறுதியில் இருந்து டிசம்பர் வரை இந்திய அணி சொந்த மைதானத்தில் 23 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 3 டெஸ்ட், 11 ஒருநாள் போட்டி மற்றும் ஒன்பது இருபது ஓவர் போட்டியில் ஆடுகிறது.

செப்டம்பர் இறுதியில் இருந்து அக்டோபர் மத்தி வரை ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் இறுதியில் நவம்பர் முதல் வாரம் வரை நியூசிலாந்து அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது.

டிசம்பர் மாதம் இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்டுகள் கேரள தலைநகர் திருவனந்தபுரம், அசாமில் உள்ள பரஸ்பரா ஆகிய இடங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு இடங்களிலும் முதல் முறையாக டெஸ்ட் நடைபெற வாய்ப்பு உள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் பிக்சர்ஸ் கமிட்டி கொல்கத்தாவில் இன்று கூடி போட்டி அட்டவணையை அறிவிக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com