நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் தவானுக்கு இடமில்லை: ஸ்ரீகாந்த் சொல்கிறார்

டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் கேஎல் ராகுல்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரீகாந்த்
தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரீகாந்த்
Published on

ரோகித் சர்மா - தவான் ஆகியோர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேன்களாக விளையாடி வந்தனர். தவானுக்கு காயம் ஏற்பட்டதால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை தொடருக்கான இந்திய அணியில் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இலங்கை தொடரில் தவான், கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க இருக்கிறார்கள்.

யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என பேசப்படுகிறது. டி20 உலக கோப்பையில் கேஎல் ராகுல்தான் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘இலங்கை அணிக்கெதிராக அடிக்கும் ரன்களை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது. நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால், டி20 உலக கோப்பைக்கு தவானை தேர்வு செய்ய மாட்டேன். அவருக்கும் கேஎல் ராகுலுக்கும் இடையில் போட்டியில்லை. கேஎல் ராகுல் மட்டும்தான் வின்னர்’’என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com