நாக்பூர் டெஸ்ட்: இலங்கை வீரர் சனகாவுக்கு அபராதம்
இந்தியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தசன் சனகா பந்தை சேதப்படுத்தி சிக்கியுள்ளார்.
நேற்றைய 2-வது ஆட்டத்தின் போது 50-வது ஓவரில் சனகா பந்தை கை விரல்களால் சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. அவர் பந்தின் தன்மையை மாற்ற முயற்சி செய்தார்.
இதுபற்றி களநடுவர் ஜோயல் வில்சன் ரிச்சர்ட் கேட்லேபுரப் மற்றும் 3-வது நடுவர் நிக்கல் லாங் ஆகியோர் மேட்ச் ரெப்ரி டேவிட் பூனிடம் புகார் செய்தனர்.
இது குறித்து சனகாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புகொண்டார். இதையடுத்து அவருக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதமாக ஐ.சி.சி. விதித்துள்ளது.
இதுபற்றி மேட்ச் ரெப்ரி டேவின் பூன் கூறுகையில், ‘சனகா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தொடக்கத்தில் இருக்கிறார். இந்த தண்டனை (அபராதம்) அவர் வருங்காலத்தில் இதுபோன்று செயல்படாமல் இருக்க உதவும் என நம்புகிறேன்’ என்றார்.

