இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம்
Published on

முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி டிசம்பர் 17-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

பகல்-இரவு ஆட்டம் என்பதால் போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் மாதம் வடமாநிலங்களில் அதிக அளவில் குளிர் நிலவும். இதனைக் காரணம் காட்டி தரம்சாலா மற்றும் மொகாலி ஆட்டங்களில் தொடங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.


மொகாலி மைதானம் (பழைய படம்)

முதலில் 1.30 மணி என்றிருந்த தொடக்க நேரத்தை தற்போது 11.30 மணியாக மாற்றியுள்ளது. 11.30 மணிக்கு போட்டி தொடங்கினால், இரவு 7.30 மணியளவில் போட்டி முடிந்துவிடும். குளிர் தாக்கம் அதிகமாக இருக்காது. இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com