இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது: நவ்தீப் சைனி

நியூசிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, இந்திய அணிக்கு தேர்வானதும் எனது கனவு நனவானது என்று தெரிவித்துள்ளார்.
நவ்தீப் சைனி
நவ்தீப் சைனி
Published on

இந்திய அணியின் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார் நவ்தீப் சைனி. 27 வயதாகும் சைனி கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். அதன்பின் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.

தற்போது நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானபோது கனவு நனவானது என்று நவ்தீப் சைனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவ்தீப் சைனி கூறுகையில் ‘‘எந்த நிலையை நான் அடைந்தேனோ, அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் இந்த கனவு இருக்கும். எனக்கும் அந்த கனவு இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. இதை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.

நான் இந்திய அணிக்காக தேர்வானபோது, என்னுடைய கனவு நனவானது. முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினேன். அதன்பின் ரஞ்சி டிராபியில், தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையின் மாற்றத்திற்கான நிலை’’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com