பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு புதிய சவால்: சகா

வங்காளதேச அணிக்கெதிராக முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது இந்தியாவுக்கு புதிய சவால் என சகா தெரிவித்துள்ளார்.
சகா
சகா
Published on

இந்திய அணி முதன்முறையாக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேச அணிக்கெதிரான இந்த போட்டி நவம்பர் 22-ந்தேதி ஈடன் கார்டனில் தொடங்குகிறது.

பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவது இந்திய அணிக்கு புதிய சவால் என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘இந்த போட்டி எங்களுக்கு முன் இருக்கும் புதிய சவால். பிங்க் பந்தில் நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. நான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், உள்ளூர் போட்டியில் விளையாடிய அனைத்து சம்பவங்களையும் நினைவு கூற முடியவில்லை. முகமது ஷமி மிகவும் வேகமாக பந்து வீசினார். அந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். ஆனால், விக்கெட் கீப்பராக பந்து பிடிக்கும் பணி மிகவும் கடினம்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com