கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு பக்க எல்லை வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி
Published on

புதுடெல்லி:

இந்தியாவின் பாதுகாப்புக்காக ராணுவத்தில் அக்னி சீரிஸ் என்ற பெயரில் பல்வேறு ரக ஏவுகணைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகளை இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தினர் அடிக்கடி விண்ணில் செலுத்தி பரிசோதித்து பார்ப்பது உண்டு.

அந்த வரிசையில் இன்று (வியாழக்கிழமை) காலை அக்னி-5 ரக ஏவுகணை சோதனை நடந்தது. திட்டமிட்டப்படி குறிப்பிட்ட இலக்கை அந்த ஏவுகணை தாக்கியது. இதனால் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

கடைசியாக அக்னி-5 ரக ஏவுகணை சோதனை 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்டு இருந்தது. 13 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அந்த ரக ஏவுகணை பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆற்றல் கொண்ட அக்னி-5 ஏவுகணையால் 5 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்க முடியும். ஆனால் சீனா இதுபற்றி கூறுகையில், “அக்னி-5 ரக ஏவுகணைக்கு 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஆற்றல் உள்ளது” என்றது.

ஒடிசா கடற்கரையில் இருந்த ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்ட அக்னி-5 ரக ஏவுகணை அணு ஆயுதங்களை தேவைக்கு ஏற்ப சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் 3 கட்ட எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கும்.

இதனால் இந்த ஏவுகணையால் சீனாவின் வடக்கு பக்க எல்லை வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com