தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி 3-ம் மைல் மேம்பாலம் அருகே புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலையில் மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தரமில்லாத சாலையை அமைத்த அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும். மீண்டும் தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மாநகர தலைவர் காஸ்ட்ரோ, மாநகர பொருளாளர் பாலா, ஜாய்சன், ஜேம்ஸ் முத்துகிருஷ்ணன், ஆவுடையப்பன், ஜெய முருகன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com