உலகில் அதிகம் பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியா: ஜெயந்த் சின்ஹா தகவல்

உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிக பெண் விமானிகள் இருப்பதாக விமான போக்குவரத்து துறையின் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா கூறினார்.
உலகில் அதிகம் பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியா: ஜெயந்த் சின்ஹா தகவல்
Published on

இந்திய பெண் விமானிகள் அசோஷியேசன் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அது தொடர்பான நிகழ்ச்சியில் விமான போக்குவரத்து துறையின் இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா மற்றும் விமானப்படை தலைமை மார்ஷல் பிரேந்தர் சிங் கலந்து கொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயந்த் சின்ஹா, 'விமான போக்குவரத்து துறையில் பெண்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானது. அவர்களின் ஆதரவு இத்துறைக்கு வலுவை கொடுக்கும். இந்தியாவில் அதிக அளவில் பெண் விமானிகள் உள்ளனர். உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியாவாகும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு இந்தியா என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.

விமானப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம். பல நாடுகளில் விமான போக்குவரத்து அதிகமாக பயன்படுத்தப்படுகிறது' என அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com