

ஸ்ரீநகர்:
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் உள்ள 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியா மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், உலக நாடுகளுக்கு மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யும் வேளையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பணியில் பிசியாக உள்ளது என ராணுவ தளபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான எம் எம் நரவானே, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா நகரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலக நாடுகள் முழுவதற்கும் இந்தியா மருத்துவக் குழுக்களை அனுப்பி வருகிறது. மேலும் தேவையான மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆனால், பாகிஸ்தானோ பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பணியில் பிசியாக உள்ளது. இது வரவேற்பிற்கு உரியதல்ல என தெரிவித்துள்ளார்.