ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: முதல்நாள் உணவு இடைவேளை வரையில் இந்தியா 45-2

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி உணவு இடைவேளை வரையில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. #INDvSA #JohannesburgTest
ஜொகன்னஸ்பர்க் டெஸ்ட்: முதல்நாள் உணவு இடைவேளை வரையில் இந்தியா 45-2
Published on

ஜொகன்னஸ்பர்க்:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி அஷ்வினுக்கு பதிலாக புவனேஷ்வர் குமாரும், ரோகித் சர்மாவுக்கு பதிலாக ரகானேவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ராகுல், ரன் ஏதும் எடுக்காத நிலையில் பிளாண்டர் வீசிய பந்தில் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார்.

அவரைத்தொடர்ந்து விஜயும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் ரபாடா வீசிய பந்தில் டி காக் வசம் பிடிபட்டு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் புஜாராவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி விக்கெட் கொடுக்காமல் நிதானமாக விளையாடி வருகிறது. உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 24 ரன்களுடனும், புஜாரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #INDvSA #JohannesburgTest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com