டிஜிட்டல் இந்தியா யுகத்தில் நெட் பேங்கிங் செய்ய தயங்கும் இணைய பாதுகாப்பு தலைவர்

பணப்பறிமாற்றத்தை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வரும் நிலையில், தேசிய இணைய பாதுகாப்பு தலைவர் குல்ஷன் ராய் நெட் பேங்கிங் செய்ய தயக்கம் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் இந்தியா யுகத்தில் நெட் பேங்கிங் செய்ய தயங்கும் இணைய பாதுகாப்பு தலைவர்
Published on

புதுடெல்லி:

டிஜிட்டல் இந்தியா, பணமில்லா பரிவர்த்தனை போன்ற திட்டங்களை அரசு முழு வீச்சில் ஊக்குவித்து வரும் நிலையில், தேசிய இணைய பாதுகாப்பு (இந்திய சைபர் செக்கியூரிட்டி) தலைவராக உள்ள குல்ஷன் ராய் இணைய வங்கி பரிவர்த்தனைகளை (நெட் பேங்கிங்) மேற்கொள்ள தயக்கம் காட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய குல்ஷன் ராய், “டிஜிட்டல் சந்தைகளை யார் நிர்வகிப்பது? போன்ற பிரச்சனைகள் உள்ளன. இதில் உள்ள நுகர்வோர் குறைகளை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? என்ற கேள்விகள் எழுகிறது. ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள் மிகவும் சிக்கலானது. அதனை தீர்ப்பது கடினமான ஒன்றாக உள்ளது” என கூறினார்.

 குல்ஷன் ராய்

மேலும், “எனக்கு டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யும் தேவை ஏற்பட்டால், சிறிய தொகையை கணக்கில் செலுத்தி விட்டு அதனை அடுத்து பரிவர்த்தனை செய்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார். #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com