பிஃபா தரவரிசையில் 21 வருடத்திற்குப் பிறகு 100-க்குள் வந்து இந்திய கால்பந்து அணி சாதனை

பிஃபா கால்பந்து உலக தரவரிசையில் 21 வருடத்திற்குப் பிறகு 100-வது இடத்திற்குள் வந்து இந்திய கால்பந்து அணி சாதனைப் படைத்துள்ளது. பிரேசில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
பிஃபா தரவரிசையில் 21 வருடத்திற்குப் பிறகு 100-க்குள் வந்து இந்திய கால்பந்து அணி சாதனை
Published on

உலகில் உள்ள மிகப்பெரிய விளையாட்டு அசோசியேசனில் கால்பந்து சங்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. பிஃபா என்றழைக்கப்படும் இந்த அசோசியேசன் இன்று சிறந்த கால்பந்து அணிகளுக்கான தரவரிசையை வெளியிட்டது. இதில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன் மிகச்சிறந்த தரவரிசையாக 1996-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட்ட தரவரிசையில் 94-வது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது சுமார் 21 வருடங்கள் கழித்து 100-வது இடத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்தியா சமீபத்தில் 3-2 என கம்போடியாவையும், 1-0 என மியான்மரையும் வீழ்த்தியிருந்தது. இதனால் 331 புள்ளிகள் பெற்று 100-வது இடத்தை பிடித்துள்ளது.

நிகரகுவா, லிதுவேனியா, இந்தியா, எஸ்டோனியா ஆகிய அணிகள் 331 புள்ளிகளுடன் 100-வது இடத்தில் உள்ளன. பிரேசில் முதல் இடத்திலும், அர்ஜென்டினா 2-வது இடத்திலும், ஜெர்மனி 3-வது இடத்திலும், சிலி 4-வது இடத்திலும், கொலம்பியா 5-வது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுக்கல், ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் முறையே 5-வது இடத்தில் இருந்து 10-வது இடம் வரை பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com