மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை பெனால்டி ஷூட்அவுட் முறையில் வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
Published on

ஆனால், 47-வது நிமிடத்தில் சீன வீராங்கனை டியான்டியன் லுவோ பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு நாட்டு வீராங்கனைகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.

பெனால்டி ஷூட்டில் இரு அணிகளுக்கும் தலா ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா நான்கு கோல்கள். இதனால் சடன்டெத் முறை பயன்படுத்தப்பட்டது.. இதில் இந்திய வீராங்கனை ராணி முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். சீனா வீராங்கனை தனது வாய்ப்பை தவற விட்டதால் இந்தியா 5-4 என வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக இந்தியா ஆசியக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன் 2004-ல் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும், இந்த வெற்றியின் மூலம் 2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் தகுதிப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com