காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்: பளுதூக்குதலில் இந்திய வீரர் வெள்ளி வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். #CWG2018 #Gururaja
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்: பளுதூக்குதலில் இந்திய வீரர் வெள்ளி வென்றார்
Published on

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

கோலாகலமாக நடைபெற்ற துவக்க விழாவில், 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசியக் கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்குதல் போட்டியில் (56 கிலோ) இந்தியாவின் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பிரிவில் 28 வயதான குருராஜா மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மலேசியாவன் முகமது இசார் அகமது 261 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். அத்துடன் காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையையும் படைத்தார். இலங்கையின் சதுரங்கா லக்மல் 248 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com