

வாழ்வா, சாவா என்ற நிலையில் இருப்பதால் கூர்க்காலாந்து போராட்டம் தொடரும் என கூர்க்கா முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் பிமல் குருங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் உள்பட பல பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து மாநிலத்தை உருவாக்க வேண்டும் என கடந்த 16ம் தேதியில் இருந்து போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிமல் குருங் தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், டார்ஜிலிங் மலைப்பகுதியில் நடந்து வரும் போராட்டம் குறித்து பிமல் குருங் கூறுகையில், “எங்களின் போராட்டம் வாழ்வா அல்லது சாவா என்ற நிலையை அடைந்துள்ளது. இந்த போராட்டம் தொடரும். இது எங்களின் கடைசிக்கட்ட போராகும். இதில் நாங்கள் கூர்க்காலாந்து மாநிலத்தை அடைவோம் அல்லது போராட்டத்தில் இறப்போம்.