13 நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மோசமானது- மருத்துவமனையில் அனுமதி

குஜராத்தில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #HardikPatel #Gujarat
13 நாளாக உண்ணாவிரதம் இருப்பதால் ஹர்திக் பட்டேல் உடல்நிலை மோசமானது- மருத்துவமனையில் அனுமதி
Published on

பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் பட்டேல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அவரது போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது. இத்தனை நாளும் சாப்பிடாததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹர்திக் பட்டேல் உடல்நிலை நேற்றே மோசமடைந்தது. இதனால் அரசு அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பட்டேல் சமூக மந்திரிகள் மற்றும் சமூக தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் அரசு ஹர்திக் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். எனவே, அவருடன் அரசு சார்பில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com