பொள்ளாச்சியில் புதரில் கிடந்தது ஐம்பொன் சிலையா? - அதிகாரிகள் விசாரணை

பொள்ளாச்சியில் புதரில் கண்டெடுக்கப்பட்ட சிலை ஐம்பொன் சிலையா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணை
விசாரணை
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி ரெயில் நிலையம் அருகே ராம் நகர் பகுதி உள்ளது. இன்று காலை அங்குள்ள புதரில் ஒரு சிலை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சிலையை எடுத்தனர். பின்னர் அதனை பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம் ஒப்படைத்தனர். புதரில் கண்டெடுக்கப்பட்ட சிலை ஐம்பொன் சிலையாக இருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர். சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஐம்பொன் சிலையை விற்பனை செய்ய கொண்டு வந்து புதரில் மறைத்து வைத்து இருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த சிலை ஐம்பொன் சிலையா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com