முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்

இமானுவேல் சேகரன் நினைவு தினம்- மு.க.ஸ்டாலின் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Published on

சென்னை:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com