அரும்பாக்கத்தில் நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 45 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரும்பாக்கத்தில் நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை
Published on

போரூர்:

நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி அரும்பாக்கம், ராஜீவ்காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சினிமா படப்பிடிப்பு சம்பந்தமாக இமான் அண்ணாச்சி அடிக்கடி வெளியில் சென்றுவிடுவது வழக்கம்.

அவரது மனைவி மற்றும் மகள் கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். வீட்டில் அவரது தம்பி மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து இமான் அண்ணாச்சி வீட்டுக்கு வந்த போது பீரோவில் இருந்த 45 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. பீரோவின் பூட்டு உடைக்கப்படவில்லை. கள்ளச்சாவடி போட்டு நகையை மர்ம நபர் திருடி இருப்பது தெரிந்தது.

இது குறித்து இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பீரோ உடைக்கப்படாததால் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக வீட்டில் வேலை பார்த்து வரும் அதே பகுதியை சேர்ந்த 2 பெண்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதே போல் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் வந்தனரா என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com