அயோத்தி பூமி பூஜையின் போது எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் புகைப்படம்
வைரல் புகைப்படம்
Published on

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டோர் மட்டுமே அழைக்கப்பட்டனர்.

பூமி பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு விதிகளை மீறும் வகையில் பல துறவிகள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர் எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் வைரலாகும் புகைப்படம் 2013 கும்ப மேளா நிகழ்வின் போது எடுக்கப்பட்டது ஆகும். இதனை ஜெர்மனியை சேர்ந்த தோர்ஜ் பெர்ஜர் எனும் புகைப்பட கலைஞர் படம்பிடித்தார்.

அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com