பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு - கோர்ட்டில் தன்னை தானே கத்தியால் குத்திய 78 வயது நபர்

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளிக்க அதனை ஏற்க முடியாத 78 வயது நபர், கோர்ட் அறையிலேயே தன்னை கத்தியால் குத்திக்கொண்டார்.
பலாத்கார வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு - கோர்ட்டில் தன்னை தானே கத்தியால் குத்திய 78 வயது நபர்
Published on

நியூயார்க்:

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜான்னி ஐகார்ட் என்ற 78 வயது முதியவர் பாலியல் புகார் ஒன்றில் கைதாகி ப்ளூமிங்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐகார்டை குற்றவாளி என அறிவித்தார்.

தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஐகார்ட் தன்னுடைய பையில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து கோர்ட் அறையில் வைத்தே தனது அடிவயிற்றில் குத்தினார். ரத்த வெள்ளத்துடன் மருத்துவமனைக்கு ஐகார்ட் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றாலும், கத்தியுடன் அவர் நீதிமன்றத்துக்கு வந்தது எப்படி?, பாதுகாப்பு கருவிகள் எதற்கு உள்ளன என போலீசார் மீது கேள்விக்கத்திகள் பாய்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com