பல்லடம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய வாலிபர் உள்பட 3 பேர் கைது

பல்லடம் அருகே உள்ள பெருமாகவுண்டம்பாளையத்தில் 10 லிட்டர் சாராயம் ஊரல் போலீசாரல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
கைது
கைது
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே பெருமாகவுண்டம்பாளையம் குட்டை பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகணேஷ், அமலதாஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு லிட்டர் வி‌ஷ .நொடியுடன் கூடிய கள்ளச்சாராயம் காய்ச்சி வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் 10 லிட்டர் சாராய ஊரல் இருந்தது, இவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ராமசாமி(50), மனோகரன் (34), பிரகாஷ்(28) ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com