மாடியிலிருந்து தவறி விழுந்த ஐ.ஐ.டி மாணவன் பலி: கொலையா? என போலீஸ் விசாரணை

கரக்பூர் ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த மாணவன் விடுதி மாடியிலிருந்து விழுந்து பலியான சம்பவம் கொலையா? என விசாரித்து வருவதாக மேற்கு வங்க மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாடியிலிருந்து தவறி விழுந்த ஐ.ஐ.டி மாணவன் பலி: கொலையா? என போலீஸ் விசாரணை
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் கரக்பூரில் மத்திய தொழில்நுட்ப நிறுவனம் உள்ளது. இங்கு இறுதியாண்டு படித்துவரும் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த நிகில் பாட்டியா என்ற மாணவன் நேற்று காலை தனது விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

படிப்பில் சிறந்து விளங்கும் நிகில் சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மாணவன் மாடியிலிருந்து தவறி விழுந்தாரா?, மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டனரா? என பல கோணங்களில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com