டெல்லி ஆடுகளத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை: இலங்கை கேப்டன் சண்டிமல் சொல்கிறார்

டெல்லி ஆடுகளத்தைப் பார்த்தால் தென்ஆப்பிரிக்கா தொடருக்காக இந்திய அணி தயார் ஆனதுபோல் தெரியவில்லை என்று இலங்கை கேப்டன் சண்டிமல் கூறியுள்ளார்.
Published on

இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியா 28-ந்தேதி தென்ஆப்பிரிக்கா புறப்படுகிறது. அங்கு ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் பங்கேற்கிறது. அதன்பின் 5-ந்தேதி முதல் டெஸ்டில் விளையாடுகிறது.

தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகுவதற்கு போதிய அவகாசம் இல்லாததால், இலங்கை தொடரை பயன்படுத்திக் கொள்ள இந்தியா நினைத்தது. இதற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் வரப்பிரசாதமாக அமைந்தது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்த நிலையில், மழை பெய்ததாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தினார்கள்.

2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற நாக்பூர் மற்றும் 3-வது போட்டி நடைபெறும் டெல்லி ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படும் என்று விராட் கோலி கூறியிருந்தார். ஆனால், நாக்பூர் டெஸ்டில் அஸ்வின் 8 விக்கெட்டும், ஜடேஜா ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்நிலையில் நாளை டெல்லியில் கடைசி டெஸ்ட் நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் புற்கள் நிறைந்ததாக இருக்கும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணி கேப்டன் சண்டிமல், நாக்பூர் ஆடுகளத்தை போன்றுதான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சண்டிமல் 3-வது டெஸ்ட் குறித்து கூறுகையில் ‘‘டெல்லி ஆடுகளைத் பார்க்கும்போது, இந்திய அணி தென்ஆப்பிரிக்கா தொடரை முன்வைத்து ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று என்னால் உறுதியாக கூற இயலாது. டெல்லி ஆடுகளம் நாக்பூர் ஆடுகளத்தை போன்றுதான் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com