

தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார்.