தோட்டத்து வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்

இடுக்கி அருகே வீட்டை இடித்து காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்திய வீட்டை படத்தில் காணலாம்.
காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்திய வீட்டை படத்தில் காணலாம்.
Published on

இடுக்கி:

இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியை சேர்ந்தவர் மோகனன். அவருடைய மனைவி விஜி. இந்த தம்பதிக்கு மேகநாதன் என்ற மகனும், மேகா என்ற மகளும் உள்ளனர். இவர்கள், சின்னக்கானல் சாலையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டுக்கு 23 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டமாக அங்கு வந்தன. பின்னர் மோகனன் வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தின. சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த மோகனன் குடும்பத்தினர், பின்பக்க வாசல் வழியாக வனப்பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். பின்னர் யானைகள் அங்கிருந்து சென்றபிறகு வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com