

இடுக்கி:
இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு ராஜாகண்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கம்மாள் (வயது 69). இவர் நேற்று முன்தினம் அங்குள்ள புற்றடி-சேற்றுக்குழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று, தங்கம்மாள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து வண்டன்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.