மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி

கேரளா இடுக்கி மாவட்டம் மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மூணாறு நிலச்சரிவு
மூணாறு நிலச்சரிவு
Published on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த 6-ந்தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்தன. 200-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 62 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்னும் இறந்தவர்களின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்கள் ஏறக்குறைய அனைவரும் தமிழர்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ‘‘நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தத் தொகை நேரடி வாரிசுதாரர்களிடம் அளிக்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்’’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com