சிலைக் கடத்தல் வழக்கு- டிஎஸ்பி காதர் பாட்சாவின் மனு தள்ளுபடி

சிலைக் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாட்சா
Published on

மதுரை:

மீட்கப்பட்ட பழங்கால சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் சிலைக் கடத்தல் கும்பலிடம் ரூ.6 கோடிக்கு விற்றதாக 2017ம் ஆண்டு டிஎஸ்பி காதர் பாட்சா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர் கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சிலைக் கடத்தல் வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காதர் பாட்சா மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான விசாரணைக்கு பிறகே வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறிய நீதிமன்றம், காதர் பாட்சாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com