உலக கோப்பை கிரிக்கெட்- ஆப்கானிஸ்தானுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட்-  ஆப்கானிஸ்தானுக்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி
Published on

கார்டிப்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க ஆட்டக்காரர்களான டிமுத் கருணரத்னே மற்றும் குசால் பெரேரா இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தனர். அடுத்தடுத்து வந்த  இலங்கை பேட்ஸ்மேன்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து  வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

இலங்கை அணி  33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது, இதனால் ஆட்டம் 41  ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

மீண்டும் களம் இறங்கிய இலங்கை அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக குசால் பெரேரா 78 ரன்களும், டிமுத் கருணரத்னே 30 ரன்களும் குவித்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி 4 விக்கெட்டும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் தலா, 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து டக்வொர்த் லெவிஸ் விதிப்படி, ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com