இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்: சச்சின் தெண்டுல்கர்

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019 #ICCWorldCup
இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்: சச்சின் தெண்டுல்கர்
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிக்கான ஆடுகளத்தை மிகவும் ‘பிளாட்’டாக தயார் செய்து வருகிறது. இதனால் 350 ரன்கள் எளிதாக சேர்க்கப்பட்டது.

இங்கிலாந்தில் போட்டி நடக்கக்கூடிய காலம் கோடைக்காலம் என்பதால், ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்காது. அதேபோல் ஈரக்காற்றும் வீசாது. இதனால் பந்து ஸ்விங் ஆகாது என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான ஆடுகளம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் கோடைக்காலம் என்பதால் இதை நான் சொல்கிறேன். 2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட, நன்றாக வெயில் அடிக்கும்போது ஆடுகளம் பேட்டிங்கிக்கு சாதகமாக இருந்தது. வெப்பமான நேரத்தில் ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருக்கும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

X

Maalai Malar
www.maalaimalar.com